Watch - #36 சாயியின் மஹாவாக்கியங்கள் | Education is for Life; Not for a Living | Part 1| Sai’s Mahavakyas - Sri Sathya Sai | Sri Sathya Sai Media Centre
#36 சாயியின் மஹாவாக்கியங்கள் | Education is for Life; Not for a Living | Part 1| Sai’s Mahavakyas
Published on August 17, 2026 12:30 PM
Thematic Presentations
ஸ்வாமியின் அருளால் ‘சாயியின் மஹாவாக்கியங்கள்’ என்ற தொடரின் 36ஆம் பகுதியினை வழங்குவதில் மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறோம். இப்பகுதியில், ‘Education is for life; not for a living!’ - ‘கல்வி என்பது வாழ்வதற்காகவே தவிர வாழ்வாதாரத்திற்காக அன்று’ என்னும் பகவானின் மஹாவாக்கியத்தினைப் பற்றி அறிந்து தெளிவோம்.
வள்ளுவப் பெருந்தகை, 'கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை' - கல்வியே ஒருவற்கு அழிவற்ற செல்வம், பிற எல்லாம் செல்வமே அல்ல என்றவாறு, எல்லோரும் அக்கல்விச் செல்வத்தைப் பெற வேண்டும், நல்ல பணியில் சேர்ந்து பொருளீட்ட வேண்டும், வாழ்க்கையை நன்கு அமைத்துக் கொள்ள வேண்டும் என்றுதானே விழைவோம்? நம் பகவானோ அப்படிப்பட்ட கல்வி வெறும் வயிற்றுப்பிழைப்புக்காக அல்லாமல் வாழ்க்கைக்காக இருக்க வேண்டும் என்கிறார். அப்படியானால், கல்வியின் உண்மையான நோக்கம் என்ன? பிழைப்பதற்கா? வாழ்வதற்கா?
இப்பகுதியில் இப்புதிரை விடுவித்து நமக்குத் தெளிவுபடுத்த வருகிறார் நம் சகோதரர் ப்ரேம் அனுஷ்.
பிழைப்புக்கான கல்வி, வாழ்க்கைக்கான கல்வி - வேறுபாட்டினை அறிவோம்!
ஸ்வாமி காட்டிய நெறிப்படி வாழ்ந்து உய்வோம்!