ஸ்வாமியின் முதல் Robe! | Smt Totapalli Girijamma | Athmartha Anubhavangal
Published on June 19, 2026 05:47 PM
Conversations
தனது ஐந்தாவது வயதிலிருந்தே ஸ்வாமியிடம் வந்த திருமதி கிரிஜம்மா அவர்கள், தனது குடும்பத்திற்கு ஏற்பட்ட தெய்வீக அனுபவங்களையும், தாம் நேரில் கண்ட ஸ்வாமியின் அற்புத லீலைகளையும் "ஆத்மார்த்த அனுபவங்கள்" என்ற இத்தொடரில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
தனது குடும்பத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஸ்வாமியே பெயர் சூட்டியதாகவும், அவரது தந்தை ஓடும் ரயிலில் தவறுதலாக வெளியேறும் கதவைத் திறந்து தண்டவாளத்தில் விழுந்த அந்த ஆபத்தான தருணத்தில், ஜகதீசனான சாயீசனே வந்து காத்ததாகவும் பகிர்ந்து கொள்கிறார்.
மேலும், பல ஆண்டுகளாக கடுமையான மாதவிடாய்ப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த கிரிஜம்மாவை, ஸ்வாமி கனவில் தோன்றி காபி குடிக்கச் சொல்லி எவ்வாறு குணப்படுத்தினார் என்பதையும் பகிர்ந்து கொள்கிறார்.
வாருங்கள்! நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஸ்வாமியின் அற்புத லீலைகளைக் கேட்டு மகிழ்வோம்.